-->

Ticker

Header Ads Widget

அலை அலையாய் சத்துருவின் ஆவியின் செயல்கள் - அகஸ்டின் ஜெபக்குமார் கவிதைகள்

Augastine Jebakumar Kavithaigal Part-7 

அலை அலையாய் சத்துருவின் ஆவியின் செயல்கள்

அடுக்கடுக்காய் அவனின் துர்ச் செய்கைகள்

அக்னி  ஸ்திரங்களுக்கும் குறைச்சலில்லை

அழிக்க வரும் அலகினை அதமாக்குவோம்


விசுவாசக் கேடகம் பிடித்து நின்றே போரில்

விரைந்து செயல்படும் கால்களும் நமதே

விண் அதிரும் ஸ்தோத்திரப் பலிகளை செலுத்தியே

விண்ணரசரின் பின்னே செயல்படுவோம் நிதமே


ஜெயம் கொண்டவர் முன்னே செல்கிறார்

ஜெயிக்கப் பிறந்தவர் பின்னே அணி அணியாய்

ஜெபம் என்ற ஆயத்தமும் வார்த்தை என்ற வாளும்

ஜீவனுக்குப் போதுமே எதிரியினை அழிக்க


வைராக்கியம் கொண்டவரும் செயல்படத் துடிப்போரும்

வைத்திடார் நம்பிக்கை தன் பலத்தில்

வையகம் காணும் மகிபனின் செயல்தனை

வைத்திடுவோம் நம்பிக்கை அவர் வார்த்தையின் மேலே


சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்

சோர்வினை அகற்றியே தொடருவோம் அவர் பணியினை

சேர்த்திடுவோம் கனிகளை அவர் களத்தில்

சேதம் வராது காப்பவர் நம்முடனேயே


                                                            அன்பரின் அறுவடைப் பணியில் 

                                             அன்பு சகோதரர் D. அகஸ்டின் ஜெபக்குமார்.


மேற்கோள் :

ஜெம்ஸ் சத்தம் - மாத இதழ் , January 2021,பக்கம் : 12


கருத்துரையிடுக

0 கருத்துகள்